காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ மாணவிகளுக்கு அறிமுக விழா நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 July 2023

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ மாணவிகளுக்கு அறிமுக விழா நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ மாணவிகளுக்கு கல்லூரி தொடங்கியதை முன்னிட்டு அவர்களை வரவேற்று கல்லூரியின் சிறப்புகள் பற்றிய அறிமுக விழா நடைபெற்றது.

அழகப்பா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் நிலோபர் பேகம் வரவேற்புரையாற்றினார். இதில் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி தலைமை வகித்து அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் பாரம்பரியம் மற்றும் அதன் சிறப்புகளை எடுத்துக்கூறி கல்லூரியில் மாணவர்களுக்கு தமிழக அரசு செயல்படுத்தும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்,நான் முதல்வன், புதுமைப்பெண், அரசு உதவித் தொகை, பேருந்து இலவசப் பயணத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் எடுத்துக்கூறி மாணவர்கள் நல்ல முறையில் படித்து தங்கள் வாழ்வில் உயர வேண்டுமென பேசினார். 


அதன்பின் தமிழ்த்துறைத் தலைவர் முருகேசன்  கலைப் பாடங்கள் குறித்தும் , வணிகவியல் மற்றும் தொழில் நிர்வாகவியல் சார்ந்த மேலாண்மை பாடங்கள் குறித்து  தொழில் நிர்வாகவியல் துறைத்தலைவர் தியாகராஜனும் அறிவியல் பாடங்கள் குறித்து தாவரவியல் துறைத் தலைவர்  கோமளவள்ளியும் விளக்கிப் பேசினர். கல்லூரியின் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் துரை கல்லூரியில் செயல்படும் விளையாட்டுத் துறை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், யூத் ரெட் கிராஸ், நுண்கலை மன்றம், மென்  திறன் பயிற்சி ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினர். புவியமைப்பியல் துறைத் தலைவர் உதயகணேசன் நன்றியுரையாற்றினார். யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் பாரதி ராணி தொகுத்து வழங்கினார்.

No comments:

Post a Comment

Post Top Ad