சுற்றுச்சூழல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு போதைப் பொருள் ஒலிப்பு விழிப்புணர்வு மராத்தான் போட்டி. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 July 2023

சுற்றுச்சூழல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு போதைப் பொருள் ஒலிப்பு விழிப்புணர்வு மராத்தான் போட்டி.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மாணகிரியில் பவர் ஹவுஸ் ஜிம் சார்பில்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு பெண்கள் பாதுகாப்பு போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாராத்தான் போட்டி நடைபெற்றது.


இப்போ போட்டியினை தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்தின் தலைவர் பொன் பாஸ்கர் துவக்கி வைத்தார் இப்போட்டியில் அனைத்து பிரிவினருக்கும் எட்டு கிலோமீட்டர் தூரமும் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியருக்கு 5  கிலோ மீட்டர் தூரமும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் மராத்தான் போட்டி நான்கு கிலோமீட்டர் தூரமும் என போட்டிக்கான தூரம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது மொத்தம் மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் அனைத்து பிரிவினர்களுக்குமான முதல் போட்டியில் முதல் பரிசாக 5001 ரூபாயும் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் முதல் பரிசாக 3001ம் மாற்றுத்திறனைகளுக்கான வீல் சார் போட்டியில் முதல் பரிசாக 3001 ரூபாய் ரொக்க பரிசுத்தொகை வழங்கப்பட்டது மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது இந்தப் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் முத்துராஜன்

No comments:

Post a Comment

Post Top Ad