

இதனால் கொதித்தெழுந்த காங்கிரஸ் பேரியக்க தொண்டர்கள் இதனை எதிர்க்கும் விதமாக அகில இந்திய அளவில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில், சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகங்கை பேருந்து நிலையம் முன்பாக பேருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பேருந்து வழித்தடத்தில் கட்சி கொடி ஏந்தியவாறு எதிர்ப்பு கோஷங்களோடு அமர்ந்தனர், அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. போலீசார் முன்னெச்சரிக்கையாக அவர்களை தடுத்து நிறுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியின் சில மூத்த தலைவரிடம் இது குறித்து கேட்ட போது அவர்கள் கூறுகையில், நீதிமன்றமும் நீதியும் அதிகார மையமான மத்தியில் உள்ள மோடி அரசிற்கு அடி பணிந்து செயல்பட்டு வருகிறது என்பது நிரூபணமாகிறது. ஏற்கனவே இதுகுறித்து மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் MP மற்றும் கார்த்தி.ப. சிதம்பரம் MP அவர்களின் ஆலோசனைப்படி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளோம். தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விடக்கூடாது எனும் உள்நோக்கத்தோடும், கட்சியை பிளவுபடுத்தும் நோக்கத்தோடும் பாஜக செயல்பட்டு வருகிறது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இத்தகைய அரசியல் சூழலில் காங்கிரஸ் கட்சியை செயல்படுத்த விடாமல் கட்சியை அழித்துவிடும் நோக்கத்தோடு பாஜக செயல்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தின் முன்னெடுப்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திரு கே. எஸ். அழகிரி அவர்கள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளார், அதன் தொடர்ச்சியாக நாங்களும் இந்த தீர்ப்பை எதிர்த்து எங்களுடைய கண்டனங்களை பதிவு செய்கிறோம் என்று தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை மாவட்ட வட்டார காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்கள் பெருமளவில் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment