காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் மான் கொம்பு வீச்சு போட்டியில் முதல் பரிசை பெற்றார். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 10 July 2023

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் மான் கொம்பு வீச்சு போட்டியில் முதல் பரிசை பெற்றார்.


முதலமைச்சர் கோப்பைக்கான சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரிப் பிரிவில் மான் கொம்பு வீச்சுப் போட்டியில்  காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் தேவதர்ஷன் முதல் இடம் பெற்றார். 


மேலும் அதற்கான கோப்பை, சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை ஒரு லட்சம் ரூபாய் அனைத்தும் தமிழக முதல்வரால் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பெற உள்ளார். மான் கொம்பு வீச்சு போட்டியில் வெற்றி பெற்ற தேவதர்ஷனை அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் பெத்தாலெட்சுமி, உடற்கல்வி இயக்குநர் அசோக்குமார் மற்றும் பேராசிரியர்கள் வெகுவாக பாராட்டி வாழ்த்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad