இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கையில் மெழுகுவர்த்தியை ஏந்தியவாறு மத்தியில் ஆளும் பாஜக அரசை வன்மையாக கண்டித்தும், மணிப்பூர் அரசு பதவி விழகிடவும், கலவரத்தை கட்டுப்படுத்த எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முன்வராத பாரத பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் பேசிய நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு எம். கணேசன் அவர்கள் கூறுகையில், கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூரில் நடந்துவரும் கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகள் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது, மேலும் இந்த கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மணிப்பூர் பாஜக அரசு பதவி விலகிட வேண்டும் என்றும் இத்தகைய செயல்கள் நடந்தும் இதுவரை அரசு கலவரத்தை கட்டுப்படுத்தவில்லை, இதுபோன்ற இழிவான செயல்களை எங்களால் சகித்துக்கொள்ள முடியாது, இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு எதிராக பாஜகவால் கட்டவிழ்த்து விடப்படும் இத்தகைய வன்முறைகளை காங்கிரஸ் கட்சி கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது, எனவே இச்செயலை செய்த கயவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும், நம் நாடு சுதந்திரம் பெற்று இதுவரை கண்டிராத அளவுக்கு மக்கள் பாஜக அரசின் கீழ் துன்ப துயரங்களை அனுபவித்து வருகின்றனர், இச்செயலுக்கு முழு தார்மீக பொறுப்பேற்று பாஜக அரசு பதவி விலகி இத்தகைய துயரங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நம் தம்பி தங்கையார்களின் காலில் விழுந்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் ஒரு சிறிய மாநிலத்தின் கலவரத்தின் கட்டுப்படுத்த முடியாத பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு எப்படி ஒட்டுமொத்த இந்தியாவின் இறையாண்மையையும் ஜனநாயகமும் கேள்விக்குறியாகி நிற்கிறது என்று கடுமையாக விமர்சித்தார்.
இந்நிகழ்வில் மாநில எஸ்சி எஸ்டி துறை துணைத் தலைவர் டாக்டர் திரு எஸ். செல்வராஜ், மாவட்ட இணை செயலாளர் ஏ. ஜான் போஸ்கோ, மாவட்ட இணை செயலாளர் திரு ஜி. காசி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பி. ரமேஷ் கண்ணன், கிழக்கு வட்டார தலைவர் திரு ஆரோக்கிய தாஸ், மேற்கு வட்டார எஸ்சி எஸ்டி துறை தலைவர் திரு பி. தங்கவேல், மேற்கு வட்டாரத் தலைவர் திரு கரு. கணேசன், சட்டமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு கே. சோனைராஜ் கருப்புசாமி, நகர் வட்டார சட்டமன்ற தொகுதி தலைவர்கள் மற்றும் செயளாலர்கள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்கள் பெருமளவில் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment