சிவகங்கையில் மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த குரூர பாலியல் வன்புணர்வை கண்டித்து திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 25 July 2023

சிவகங்கையில் மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த குரூர பாலியல் வன்புணர்வை கண்டித்து திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு குகி பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வண்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிப் பெரும் பரபரப்பு  ஏற்படுத்தியது. அப்பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்கத்தவறிய ஒன்றிய பாஜக அரசின் மெத்தன போக்கை வண்மையாக கண்டித்தும், மணிப்பூரை ஆளும் 'கையாளாகாத அரசு' என விமர்சனங்களுக்கு உள்ளான பைரன் சிங் அரசு பதவி விலக வேண்டும் எனவும் சிவகங்கையில் திமுக மகளிர் அணி சார்பில் திமுக மாநில மகளிர் தொண்டரணி இணைச் செயலாளர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிகுமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த பெருந்திரளாக திரண்ட மகளிர் வெள்ளத்தில் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மாபெரும் கண்டன உரை நிகழ்த்தினார், நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி. பவானி கணேசன் மற்றும் மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் திருமதி. ஹேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக மகளிர் அணி நிர்வாகிகளும், மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகளும், ஆயிரக்கணக்கான பெண்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.


- செய்தியாளர் லிவிங்ஸ்டன் 

No comments:

Post a Comment

Post Top Ad