அதில், வேளாண்மைத் துறையின் சார்பில், திருப்பத்தூர் வட்டாரத்திற்குட்பட்ட கிராமத்தில் 2021-22 ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட தரிசு நில தொகுப்பின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது, அப்பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக சாகுபடி செய்யாமல் இருந்த தரிசு நிலத்தினை, அக்கிராமத்தில், 14 விவசாயிகள் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு உட்பட்ட தரிசு நிலத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-22-ன் கீழ் 18 ஏக்கர் நெல் பரப்பில் முட்புதர்கள் நீக்கம் செய்து போர்வெல், பம்ப்செட் அமைத்து மின் இணைப்பு பெற்று, தற்பொழுது நீர் ஆதாரத்தினை பெருக்கி நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது குறித்தும், இந்த தரிசு நிலத்தில் மா, பலா, கொய்யா போன்ற 2080 கன்றுகள் நடவு செய்யப்பட்டு நுண்ணீர் பாசனம் மூலம் பாசனம் செய்யப்பட்டு வரும் முறைகள் குறித்தும், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், தொகுப்பிலுள்ள விவசாயிகள் தரிசு நிலத் தொகுப்பினை சுற்றி சோலார் வேலி அமைத்து தர மாவட்ட ஆட்சித்தலைவர்; அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கைக்கிணங்க நடப்பில் உயிர் வேலி அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கும் சோலர் வேலி அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, திருப்பத்தூர் வட்டாரத்தில் நெடுவயல் கிராமத்தில் நடப்பு ஆண்டின்படி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு ஒரு பஞ்சாயத்தில் 300 விவசாயிகளுக்கு, ஒரு குடும்பத்திற்கு 2 தென்னங்கன்றுகள் வீதமும், அதே போன்று தோட்டக்கலைத்துறையின் சார்பில் பழ மரக்கன்றுகளும் விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர், இந்த ஆய்வின் போது வழங்கப்பட்டது.
அதேபோன்று வேளாண் பொறியியல் துறையின் சார்பில், திருப்பத்தூர் வட்டாரத்திற்குட்பட்ட திருக்கோலக்குடி, மின்னல்குடி ஆகிய பகுதிகளில் ஆதிதிராவிட நல விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் கூடிய போர்வெல், சோலார் அமைக்கப்படும் பணிகள் தொடர்பாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், பத்து ஆண்டுகளாக தரிசாக இருந்த நிலத்தினை வேளாண்மை பொறியியல் துறை மூலம் முழு மானியத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் போர்வெல் மற்றும் சோலார் பம்ப்செட் அமைத்து, அதன் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், தற்போது அந்நிலத்தில் மூன்று ஏக்கர் கடலை பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும், வேளாண்மைத்துறை மூலம் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் 2022-23-ன் கீழ் தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப்பார்வைக்கான இயக்கம் திட்டத்தில் நடவு செய்யப்பட்ட தேக்கு மரக்கன்றுகள் தொடர்பாகவும் மாவட்ட ஆட்சித்தலைவரால், ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதனை துறை ரீதியாக முறையாக பராமரிப்பதற்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்த ஆய்வுகளின் போது வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத்திட்டம்) த.பன்னீர்செல்வம், தோட்டக்கலை துணை இயக்குநர் சக்திவேல், உதவி செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) முத்துக்குமார் மற்றும் திருப்பத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் செந்தில்நாதன் உட்பட சம்மந்தப்பட்டு துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment