இருசக்கர வாகன நிறுத்தத்தை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் - ஆசிரியர்கள் மாணவிகள் மகிழ்ச்சி. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 19 July 2023

இருசக்கர வாகன நிறுத்தத்தை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் - ஆசிரியர்கள் மாணவிகள் மகிழ்ச்சி.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி  மாணவிகளின் நீண்ட நாள் கோரிக்கையான இருசக்கர வாகன நிறுத்தத்தை மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து  ஒதுக்கீடு செய்து கட்டுமான வேலைகளை துரிதப்படுத்தி முடித்து பள்ளி மாணவியரின் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தார். 

பல ஆண்டுகளாக இருசக்கர வாகன நிறுத்துமிடம் போதிய இடவசதி இல்லாததால் பள்ளிக்கு வெளியில் மாணவியர் இரு சக்கர வாகனங்களை அன்பு நகர் - அண்ணாமலை நகர் செல்லும் பிரதான சாலைக்கு இருபுறமும் நிறுத்தி வந்தனர், இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வந்த சூழ்நிலையில், பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தீர்வு காணும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தன்னுடைய சீரிய முயற்சியினால் வாகன நிறுத்துமிடத்தை தேர்வு செய்து விரைவில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு மாணவிகளிடம் கையளித்தார். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளின் சார்பாக பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி லதா அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.


இந்நிகழ்வில் நகர் கழக செயலாளர் திரு பொன்னுசாமி அவர்கள், ஒன்றிய கழக செயலாளர் திரு துரை ராஜாமணி அவர்கள், நகராட்சி துணை தலைவர் திரு பாலசுந்தர் அவர்கள், 2வது வார்டு உறுப்பினர் திருமதி இந்துமதி திருமுருகன் அவர்கள், நகர் கழக அவைத் தலைவர் திரு ரவிசந்திரன் அவர்கள், மாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி  முருகவள்ளி தேசிங்கு ராஜா அவர்கள், சிவகங்கை நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் திரு மு. சந்திரசேகர் அவர்கள், விருதுநகர் கோட்ட பொறியாளர் திருமதி பாக்கியலட்சுமி அவர்கள், மானாமதுரை பொறுப்பு உதவி கோட்ட பொறியாளர் திரு சிவகுமார் அவர்கள், நகர் 2-வது வார்டு செயலாளர் திரு திருமுருகன் அவர்கள், பள்ளி தலைமையாசிரியர் திருமதி லதா, கட்சி நிர்வாகிகள் சசிபிரசாத், சதிஷ், சீனிவாசன், பள்ளி ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் லிவிங்ஸ்டன்

No comments:

Post a Comment

Post Top Ad