சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழமலைநகர் - பையூர் பிள்ளைவயல் வருவாய் கிராமத்தில் வசித்து வரும் நரிக்குறவ பழங்குடியின மக்களுக்கு "பழங்குடியினர் சாதி சான்றிதழ்" வழங்கும் விழாவில் சான்றிதழ்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் ஆகியோர் நேற்று வழங்கினர்கள். இதில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி. பா. சிதம்பரம், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். மாங்குடி, சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment