திருப்புவனம் ஒன்றியத்தில் 'மக்கள் தொடர்பு திட்ட முகாமில்' நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 13 July 2023

திருப்புவனம் ஒன்றியத்தில் 'மக்கள் தொடர்பு திட்ட முகாமில்' நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் ஒன்றியம் அச்சங்குளம் ஊராட்சியில் நேற்று "மக்கள் தொடர்பு திட்ட முகாமில்" ரூபாய் 64.8 லட்சம் மதிப்பிட்டில் 124 பயணாளிகளுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் அவர்களின் தலைமையிலும், முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசி ரவிக்குமார் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் மாவட்ட கோட்டாட்சியர் அவர்கள், அரசுத்துறை அலுவலர்களும், ஒன்றிய கழக செயலாளர்கள், பேரூர் செயலாளர் திரு நாகூர்கனி அவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் திரு ஈஸ்வரன் மற்றும் திரு சுப்பையா, ஊராட்சிமன்ற தலைவர் திரு சேகர், பேரூராட்சி துணைத்தலைவர் திரு ரஹ்மத்துல்லாகான், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் திரு அச்சங்குளம் முருகன், திரு மடப்புரம் மகேந்திரன், திருப்புவனம் திரு பிரபு, இலக்கியன், கிளை கழக செயலாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள்.


- செய்தியாளர் லிவிங்ஸ்டன்


No comments:

Post a Comment

Post Top Ad