மேலும் வாகன விபத்துக்களும் அதிகரித்தும் வருகின்றது என்றும் கடைசியாக இரண்டு நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் பலியாகி உள்ளார் என்றும் கூறப்படுகின்றது. மக்கள் நீண்ட நாட்களாக இங்கு மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வருந்துகின்றனர். பொதுநலன் கருதி பல பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தும், பல அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தும் எந்த ஒரு பலனும் இல்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இந்த சாலையில் விபத்து நடப்பது வாடிக்கையாகவே மாறிவருகிறது.
மேலும் மதுரையில் இருந்து வரும் பேருந்துகளில் நான்கு வழி பைபாஸ் சாலையில் ஓரத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அங்கே இருந்து அண்ணா சிலை பேருந்து நிறுத்தத்திற்கு மற்றும் மானாமதுரை டவுனுகும் நடந்து வர முடியாத சூழ்நிலை உள்ளது. கூடுதலாக சமீப காலங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது என்றும் பொதுமக்கள் புகார் அளிக்கின்றனர். இந்த சாலையை கடந்து செல்லும் மக்கள் அனைவரும் என்ன நடக்குமோ என்ற ஒருவித பய உணர்வோடு தான் செல்கின்றனர், ஏனெனில் ஆற்று ஓரம் என்பதாலும் அதை ஒட்டி கால்வாய் செல்வதாலும் அடர்ந்த பூண்டு புதர்களில் இருந்து கீரி பாம்பு போன்றவற்றாலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நகராட்சி சார்பாகவோ அல்லது நெடுஞ்சாலை துறை சார்பாகவோ தக்க நடவடிக்கை எடுத்து தருமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தாழ்மையோடு வேண்டி கேட்டுக் கொள்கின்றனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment