சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட 27 வது வார்டு கவுண்சிலர் மற்றும் நமது உரிமை பாதூகாப்பு இயக்க தலைவர் டாக்டர் பிரகாஷ் தலைமையில் இயக்கத் தோழர்கள் மின்சார தடை காரணமாக காரைக்குடியைச் சேர்ந்த பல பகுதி மக்களும் சேர்ந்து மின்சார வாரியத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
புளியந்தோப்பு முத்துராமலிங்க நகரில் இரண்டு டிரான்ஸ்பார்மர்களும், நகர் முழுதும் தடையற்ற மின்சாரமும் வேண்டி விண்ணப்ப ஆர்ப்பாட்டம் காரைக்குடி கழனிவாசல் மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில் தீர்மான விண்ணப்பம் 15 நாளில் முடித்து தருவதாக உறுதியளித்தனர்.
- செய்தியாளர் முத்துராஜன்


No comments:
Post a Comment