முத்தமிழ் அறிஞர் டாக்டர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் மாங்குளம் ஊராட்சியில் உள்ள அலங்காரகுளத்தை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் தனது சீரிய முயற்சியால் அதனை சீரமைத்து, செப்பனிடப்பட்டு குளத்தை சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கினார் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார்.


இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், மாவட்ட வனத்துறை அலுவலர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்களும், ஒன்றிய திமுக செயலாளர்கள் துரை, ராஜாமணி, திரு தமிழ்மாறன், ஒன்றிய குழு துணை தலைவர் முத்துச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் முருகவள்ளி தேசிங்கு, ஒன்றிய கவுன்சிலர் ராதா சிவச்சந்திரன், உள்ளாட்சி பிரதிநிதிகளும், திமுக கிளை செயலாளர்களும், ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
- செய்தியாளர் ஜே.கெ. லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment