காரைக்குடியில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது; பாராளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 June 2023

காரைக்குடியில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது; பாராளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு பிரவீன் குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. 

இக்கூட்டத்துக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைப்பு விடுக்கப்பட்டு வருகை தந்த  நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு பா. சிதம்பரம் அவர்களும், சிவகங்கை பாராளுமன்ற தொகுதி மக்களவை உறுப்பினருமான மாண்புமிகு திரு கார்த்தி பா. சிதம்பரம் அவர்களுக்கும், மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். மாங்குடி அவர்களுக்கும் சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் காங்கிரஸ் அனைத்து நிர்வாகிகள் சார்பாக சிவகங்கை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு பிரவீன் குமார் அவர்கள் சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தார். மேலும் உறுப்பினர்கள் இருவரும் அவர்கள் சார்பாக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி செயற்குழுவில் பங்கேற்றனர். 


இந்தக் கூட்டத்தில் முக்கிய அம்சமாக சிவகங்கை மாவட்டத்தில் புதிய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக மற்றும் சிவகங்கை மாவட்ட அனைத்து இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் செயற்குழு கூட்டமும் இனிதே நடைபெற்று முடிந்தது. புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.


மேலும் இக்கூட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் அவர்களும், சிவகங்கை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள், துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் ஆகியோர் பெரும் அளவில் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் ஜே. கே. லிவிங்ஸ்டன் 

No comments:

Post a Comment

Post Top Ad