சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் "அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளம்" என்ற கருத்தியல் பள்ளி மாணவ மாணவிகள் பேரணியாக நடந்து சென்று விழிப்புணர்வு செய்தனர். இந்த பேரணி பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


மேலும் இப்பேரணியில் கல்வியின் சிறப்பு என்ன, கல்லாமை எவ்வளவு பெரிய தவறு, அனைவரும் கல்வி கற்க வேண்டும் மற்றும் கல்வி பற்றிய திருக்குறள்கள் போன்ற பதாகைகளை ஏந்தியவாறு பள்ளி மாணவ மாணவிகள் பேரணி சென்றனர். பள்ளி மாணவ மாணவிகளுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் என்பதால் இப்பேரணி மாலை நேரத்தில் நடைபெறு தலைமை ஆசிரியர் தேர்வு செய்து கொண்டது பாராட்டுதலுக்குரியது.
இதில் பள்ளியில் உள்ள அனைத்து மாணவ மாணவிகள் ஆர்வத்தோடு பங்கேற்றனர். இந்நிகழ்வை பார்த்து வியந்த பொதுமக்கள் மற்றும் சாலையோர கடை வியாபாரிகள் வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
- செய்தியாளர் ஜே. கே. லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment