சிவகங்கை மாவட்டம் இளைஞர் காங்கிரஸ் சார்பாக சிவகங்கையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் திரு ராஜீவ் கண்ணா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மிக முக்கியமான ஐந்து தீர்மானங்கள் கட்சி ரீதியாவும் ஆளும் பாசிச பாஜகவை எதிர்த்து நிறைவேற்றப்பட்டன. மற்றும் வர இருக்கக்கூடிய பாராளுமன்றதேர்தல் வியூகங்கள் பற்றியும் ஆலோசனை நடைபெற்றது. மேலும் தொகுதி பிளாக் வாரியாக பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைப்பது, வர இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியின் விழாக்கள் தொடர்பாகவும் மற்றும் தெரு முனை பிரச்சாரம் போன்ற ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு பிரவீன் குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இதில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மற்றும் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள், துணை தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் போன்ற நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள்.
- செய்தியாளர் ஜே. கே. லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment