சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று (26/06/2023) அழகப்பா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டத்தின் மூலமாக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணி காலை 10.00 மணிக்கு கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபத்தில் தொடங்கி காரைக்குடி கம்பன் மண்டபத்தில் நிறைவு பெற்றது.


சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணிக்கு முனைவர். R. ஸ்டாலின் (IPS)காவல்துறை உதவி கண்காணிப்பாளர் அவர்களும் மற்றும் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர். பெத்தாலெட்சுமி அவர்களும் தலைமை வகித்தனர். அரசு அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
நாட்டு நலப்பனித்திட்ட அலுவலர்கள் முனைவர். அ.சுந்தரி, முனைவர். தெ. தெய்வமணி, முனைவர். லெட்சுமண குமார், ஆகியோர் மாணவர்களை வழிநடத்தினர். இந்நிகழ்வில் 350 நாட்டு நலப்பணி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
கல்லூரி மாணவ மாணவிகள், பேரணியில் கலந்து கொண்டு பதாகைகள் ஏந்தி, போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு, வாசகங்களை
உரக்கச் சொல்லி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment