சிவகங்கை மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பாக காரைக்குடி வித்தியாகிரி பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, நாட்டுபுற நடனப் போட்டி,ஓவியப்போட்டி, புகைப்படப்போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
அதில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி சார்பாக பல்வேறு மாணவ மாணவியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். நாட்டுப்புற நடனப் போட்டியில் கிருஷ்ணா குமார்,ஜகத் ரட்சகன், அழகு சுந்தரம்,தமிழரசன்,கௌதம் பொன்னழகு,தனலட்சுமி அபிநயா,காவியா பிரியதர்ஷினி ஆகியோர் அழகப்பா அரசு கலைக்கல்லூரி சார்பாக இரண்டாம் பரிசினை பெற்றனர்.


பரிசு பெற்ற மாணவ மாணவியர்களை அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் முனைவர். பெத்தாலெட்சுமி, நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் மார்ட்டின் ஜெயப்பிரகாஷ், நுண்கலை மன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் ஷர்மிளா, முனைவர். லட்சுமண குமார் ஆகியோர் பாராட்டினர்.
- செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment