இதில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி புவியமைப்பியல் முதுநிலை மாணவர்கள் மகாலட்சுமி, ஆல்வின் ஜோஸ், ஸ்ரீவித்யா மற்றும் இளநிலை மாணவர்கள் விக்காஷ், மொத்திராம், ஆரோன் அலெக்சாண்டர் ரொனால்ட், பூமிகா, பார்கவி, யாமினி, சிவஶ்ரீ ஆகிய 10 மாணவர்கள் பங்கேற்றனர். நடைபெற்ற மொத்தம் 15 போட்டிகளில் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் அரசு கலைக் கல்லூரி புவியமைப்பியல் மாணவர்கள் ஆறு போட்டிகளில் பரிசுகளை வென்றனர்.


மாதிரி விளக்க காட்சியில் மோத்திராம் மற்றும் பூமிகா முதல் பரிசும், சுவரொட்டி விளக்க காட்சியில் விக்காஷ் இரண்டாம் பரிசும், முக ஓவிய போட்டியில் பார்கவி மற்றும் ஶ்ரீவித்யா இரண்டாம் பரிசும், ட்ராக் இட் மற்றும் ட்டிராசிக் பார்க் எனும் போட்டிகளில் ஆரோன் அலெக்சாண்டர் ரொனால்ட் மற்றும் விக்காஷ் முதல் மற்றும் இரண்டாம் பரிசையும், ஜியோ மீம்ஸ் போட்டியில் மோத்திராம் முதல் பரிசையும் பெற்று தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு அழகப்பா அரசு கலைக் கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி மற்றும் புவியமைப்பியல் துறைத்தலைவர் உதயகனேசன் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment