அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி தலைமை வகித்து யோகாவின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் முனைவர் சுந்தரி வரவேற்புரை ஆற்றினார். இயற்பியல் துறை பேராசிரியர், யோகா பயிற்சியாளர் முனைவர் சுப்பு பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் இடையே யோகாசனம் செய்து காண்பித்து, யோகாசனம் உடலுக்கும் மனதிற்கும் எவ்வாறு நன்மை பயக்கிறது என்று சிறப்புரையாற்றினார்.


நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் முனைவர் லட்சுமணகுமார் நன்றி கூறினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் தெய்வமணி, உடற்கல்வித்துறை இயக்குநர் முனைவர் அசோக்குமார் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment