சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் உள்ள கீழடி மற்றும் பூவந்தி ஆகிய ஊராட்சி பகுதிகளில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு சார்பாக சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவர் மாண்புமிகு திரு வேல்முருகன் அவர்கள் தலைமையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கள ஆய்வில் அகழாய்வில் கிடைத்த பொருட்கள், காட்சிப்படுத்தப்பட்ட படங்கள் மற்றும் அகழாய்வில் தோண்டப்பட்ட நிலத்தில் உள்ள குழி முதலியவற்றை இக்குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.


இதற்கிடையில் கள ஆய்வு மேற்கொள்ள வந்தவர்களை மானாமதுரை சட்டமன்ற தொகுதி மக்கள் சார்பாக மாண்புமிகு முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் மரியாதை நிமித்தமாக வரவேற்றதுடன் கள ஆய்விலும் தொடர்ந்து கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப., அவர்களும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை குழு உறுப்பினர்களும் மற்றும் அரசுத் துறையை சார்ந்த உயர் அதிகாரிகளும் ஆய்வில் கலந்துகொண்டார்கள்.
- செய்தியாளர் ஜே. கே. லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment