இதில் மாவட்ட தலைவர் திரு சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் பழனியப்பன் மற்றும் சிவகங்கை நகர் தலைவர் திரு குரு. கணேசன், மாவட்டச் செயலாளர் த. கணேசன் EX MC, மாவட்ட முன்னாள் மகளிர் அணி தலைவி திருமதி ஏளம்மாள் ராஜேந்திரன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பார்வதி பாலு, ஒன்றிய கவுன்சிலர் ஒக்கூர் கண்ணன், வார்டு தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதேபோல் காரைக்குடியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். மாங்குடி அவர்கள் தலைமையில் திரு ராகுல் காந்தி அவர்களின் பிறந்த நாளை கேக் வெட்டி இனிப்புகள் வழங்கியும், பின்னர் மதிய உணவு வழங்கியும் கட்சி நிர்வாகிகளோடு சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்தார் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள். உடன் காரைக்குடி நகர தலைவர், காரைக்குடி வட்டார தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


அதேபோல் சிவகங்கையில் உள்ள கீழச்செவல்பட்டியில் மாவட்ட பொருளாளர் எஸ். எம். பழனியப்பன் தலைமையில் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு ராகுல்காந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் வட்டார, வார்டு மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம கமிட்டி தலைவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற ராகுல்காந்தி பிறந்தநாள் விழாவில் கேக் மற்றும் இனிப்பகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட முன்னாள் தலைவர் ராஜரெத்தினம், வட்டாரதலைவர் மதியழகன், மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கிய சாந்தாராணி, A. சிதம்பரம், வெள்ளைச்சாமி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் மோகன்ராஜ், சண்முகராஜன், மாவட்ட துணைதலைவர் உடையார், நகர் மன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், மகேஸ்குமார், நகர் நிர்வாகிகளான சீனிவாசன், லெட்சுமணன், பூக்கடை பாண்டியன், செல்வமுருகன், கண்ணன், செபஸ்தியான், ராம்குமார், பாஸ்கரன் ஆனந்தகுமார், மணிக்கண்ணன், பிரான்சிஸ், மணிவண்ணன், முத்துவடிவேல் சுரேஷ், சமயலிங்கம், நாகராஜன், தேவா மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கூடுதலாக மானாமதுரை தாலுகாவில் உள்ள ராஜகம்பீரத்தில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திரு ராஜீவ் கண்ணா தலைமையில் திரு ராகுல்காந்தி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு போட்டு பேனா போன்ற பரிசு பொருட்களை வழங்கி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து கொண்டாடினார்.
- செய்தியாளர் ஜே. கெ. லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment