தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டாக திகழும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த எந்த தடையுமில்லை என உச்ச நீதிமன்ற தீர்ப்பு கடந்த தினங்களுக்கு முன் வழங்கியதை தொடர்ந்து, இத்தீர்பை பெற்று தந்த தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களை பாராட்டும் விதமாக, 'தமிழ்நாடு அனைத்து ஜல்லிக்கட்டு பேரமைப்பு சங்கங்களின்' சார்பில் புதுக்கோட்டையில் நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்று முடிந்தது. இக்கூட்டத்தில் அனைத்து ஜல்லிக்கட்டு பேரமைப்பு சங்கங்களின் நிர்வாகிகள் சார்பாகவும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் தங்களின் மணமார்ந்த நன்றியை முதல்வருக்கு தெரிவித்துக் கொண்டனர்.


இதில் மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்களான திரு கே. என். நேரு அவர்களும், திரு மூர்த்தி அவர்களும், திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசிரவிக்குமார் மற்றும் திமுகவை சேர்ந்த மாநில மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment