தமிழக முதல்வர் அவர்களின் திட்டங்களில் ஒன்றான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 2022 - 2023 இல் காரைக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கபடி போட்டியில் முதல் இடத்தை பெற்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் அவர்களிடம் பதக்கத்தையும் அதற்கான சான்றிதழ்களையும் பெற்று இன்று நகர்மன்றத் தலைவர் சே. முத்துத்துரையை நேரில் சந்தித்து பதக்கங்களை சான்றிதழ்களையும் காண்பித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.
இந்நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் அ. வீர முத்துக்குமார், ஆசிரியப் பெருமக்கள் நகர்மன்ற உறுப்பினர் சோனா கண்ணன், ஹேமலதா செந்தில் விஷ்ணு பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.


No comments:
Post a Comment