இக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது, பூத் கமிட்டி நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது தொடர்பாகவும், தேர்தலில் எத்தகைய வியூகங்களை முன்னெடுக்கலாம் என்பது குறித்தும் கட்சி நிர்வாகிகளை சந்தித்த நாடாளுமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.


இதில் சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். மாங்குடி அவர்களும், மாநில பொதுக்குழு உறுப்பினர் மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான திரு AC. சஞ்சய் அவர்களும் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் மானாமதுரை நகர் காங்கிரஸ் நிர்வாகிகள், சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள், மாநில இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள்,மகிலா காங்கிரஸ் நிர்வாகிகள், மானாமதுரை காங்கிரஸ் நகர் மன்ற உறுப்பினர், மானாமதுரை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- செய்தியாளர் ஜே.கெ. லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment