சிவகங்கை மாவட்டம் அழகப்பா அரசு கலைக் கல்லூரி, காரைக்குடி செய்திக்குறிப்பு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 1 June 2023

சிவகங்கை மாவட்டம் அழகப்பா அரசு கலைக் கல்லூரி, காரைக்குடி செய்திக்குறிப்பு.


காரைக்குடி, அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2023-2024ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு இளநிலை மாணவர் சேர்க்கைக்கான  முதல் பொது கலந்தாய்வின் இரண்டாம் சுற்று ஜுன் 05,06,07ஆகிய தேதிகளில் நடைபெறும். 05.06.2023 அன்று திங்கள்கிழமை காலை 9 மணியளவில் பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல்(பி.சி.ஏ),மற்றும் பி.எஸ்.சி.புவி அமைப்பியல் பாடப்பிரிவுகளுக்கும்  06.06.2023 செவ்வாய்கிழமைகாலை 9 மணியளவில் வணிகவியல்(பி.காம்.), தொழில் நிர்வாகவியல்(பி.பி.ஏ.) பாடப்பிரிவுகளுக்கும், 07.06.2023 புதன்கிழமை அன்று காலை 9 மணியளவில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு மற்றும் பொருளியல் பாடப்பிரிவுகளுக்கும் முதல்  பொதுக்கலந்தாய்வின் இரண்டாம் சுற்று நடைபெறும். 


இக்கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்ட மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ள இயலும். இக் கலந்தாய்வில் பங்கேற்க வரும்  மாணவ மாணவிகள் பெற்றோருடன் தங்களின் 10,11, மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆகியவற்றின் அசல் மற்றும் இரண்டு நகல்கள், நான்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும், கல்லூரிக்கு விண்ணப்பித்த விண்ணப்பப் படிவத்தின் அனைத்து பக்கங்களையும் உள்ளடக்கிய நகல்கள் இரண்டும் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad