சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி 2023ஆம் ஆண்டிற்கான தேசிய தர மதிப்பீட்டில் 63வது இடத்தைப் பெற்றுள்ளது. கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதி, மாணவர்களின் தேர்ச்சி விகிதம், பேராசிரியர்களின் ஆய்வு வெளியீடுகள், மாணவர்களின் பணி வாய்ப்பு மற்றும் பிற செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆண்டு தோறும் இந்திய அளவில் கலை அறிவியல் கல்லூரிகளின் தர வரிசைப் பட்டியலை தேசிய தர மதிப்பீட்டுக் குழு வெளியிடுவது வழக்கம்.


அவ்வகையில் 2023 ஆம் கல்வியாண்டிற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் இந்திய அளவில் முதல் 100 இடங்களுக்குள் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 35 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. இதில் நான்கு அரசு கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. அந்த நான்கு அரசுக் கல்லூரிகளில் சென்னையிலிருந்து இரண்டு அரசுக் கல்லூரிகளும் கோவையில் இருந்து ஒரு அரசுக் கல்லூரியும், காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதற்காக உழைத்த பேராசிரியர்களையும் ஆசிரியர்களல்லா பணியாளர்களையும், மாணவர்களையும் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி பாராட்டினார். செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment