சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி திருப்புவனம் ஒன்றியம் திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு "இலவச பன்நோக்கு மருத்துவ முகாமினை" மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.


இந்நிகழ்வில் திருப்புவனம் அரசு மருத்துவமனை முதல்வர் அவர்களும், மருத்துவத்துறை அதிகாரிகளும், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் திரு சேங்கைமாறன் அவர்களும், அரசு மருத்துவர்களும், நகர் கழகச் செயலாளர் திரு நாகூர்கனி அவர்களும், ஒன்றிய கழக செயலாளர் திரு கடம்பசாமி அவர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், திமுகவை சேர்ந்த கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
- செய்தியாளர் ஜே. கெ. லிவிங்ஸ்டன்.
No comments:
Post a Comment