சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளனர்.


பெண்களுக்கான கால்பந்து போட்டியில் முதலிடமும், கிரிக்கெட், ஹாக்கி, இறகு பந்து, மேசைப்பந்து, நீச்சல் மற்றும் தடகளம் ஆகிய போட்டிகளில் இரண்டாம் பரிசினையும், ஆண்களுக்கான கிரிக்கெட், ஹாக்கி, மேசைப்பந்து போட்டிகளில் இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி மற்றும் உடற்கல்வித்துறை இயக்குனர் முனைவர் அசோக் குமார் ஆகியோர் பாராட்டினர்.
No comments:
Post a Comment