சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் "முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் - 2023" க்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த பரிசு வழங்கும் அரசு விழாவில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினார். அதேபோல் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு முன்னாள் அமைச்சர், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்கள்.
மேலும் இதில் மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் அவர்களும், பள்ளி தாளாளர் அவர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவ, மாணவியர்களும் கழக உடன்பிறப்புகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
- செய்தியாளர் ஜே. கே. லிவிங்ஸ்டன்


No comments:
Post a Comment