சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே காரைக்குடி, சிவகங்கை வழி மதுரை செல்லும் தனியார் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் பேருந்து நடத்துனர் சம்பவ இடத்திலேயே பேருந்தில் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்,இக்கோர விபத்து குறித்து குன்றக்குடி காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே திருப்பத்தூர் -காரைக்குடி செல்லும் சாலையில் தனியார் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்ததில் விபத்துக்குள்ளானது.சம்ப இடத்திலேயே நடத்துநர் பரிதாபமாக உயிரிழந்தார். இதில் பயணம் செய்தவர்களுக்கு பலத்த காயமடைந்தனர். மேல் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதையறிந்த காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி மற்றும் நகர் வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:
Post a Comment