

மேலும் சிலம்பம் யோகா கராத்தே போன்ற கலைகளை மாணவ மாணவியர் உற்சாகமாக மேடையில் அரங்கேற்றம் செய்தனர். பின்னர் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவ்விழாவை வீரவிதை விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைகளின் அறக்கட்டளை தலைவரும் சிறப்பு விருந்தினருமான மாஸ்டர் கலைவளர்மணி டாக்டர் கே. பெருமாள் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். கலைநிகழ்ச்சியின் இறுதி பகுதியாக சிறந்த வீரருக்கான ஐந்து அடி உயரம் கொண்ட கோப்பையும் பரிசாக இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்விழாவில் மாணவ மாணவியரின் பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் நிர்வாக கலந்துகொண்டுனர், இதுபோல் இனிவரும் காலங்களில் மாணவ மாணவிகள் இக்கலைகளில் அதிகப்படியாக ஊக்குவித்து பரிசு பெற வைக்க வேண்டும் என்று அறக்கட்டளைக்கு நமது தமிழக குரள் சார்பாக பிரத்யேக வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டது.
- செய்தியாளர் ஜே.கெ. லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment