காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அறிவிப்பு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 10 June 2023

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அறிவிப்பு.


காரைக்குடி , அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2023-2024ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு இளநிலை மாணவர் சேர்க்கையில் காலியாக உள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்ட பொதுக்கலந்தாய்வு அனைத்து அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு 15.06.2023 வியாழக்கிழமையும் அனைத்து கலை பாடப் பிரிவுகளுக்கு 20.06.2023 செவ்வாய்க்கிழமையும் காலை 9 மணியளவில் கல்லூரியின் உமையாள் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. 




இக் கலந்தாய்வில் பங்கேற்க வரும்  மாணவ மாணவிகள் பெற்றோருடன் தங்களின் 10,11, மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்,  நான்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும், கல்லூரிக்கு விண்ணப்பித்த விண்ணப்பப் படிவத்தின் அனைத்து பக்கங்களையும் உள்ளடக்கிய நகல்கள் இரண்டும் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad