இது பற்றி அரசியல் வட்டாரங்களில் கேட்டபோது, சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி திரு கார்த்திக் பா. சிதம்பரம் அவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்பது போன்ற செய்திகள் ஊடகங்களில் வலம் வரத் தொடங்கிய நிலையில் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளதாக அமைந்துள்ளது என்று சுருக்கமாக முடித்துக் கொண்டனர் மூத்த அரசியல் விமர்சகர்கள்.


மேலும் இது பற்றி தொகுதி வட்டாரத்தில் கேட்டபோது, கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து பதவி பிரமாணங்கள் நிறைவடைந்த நிலையில், மேகதாது விவகாரத்தில் திரு டி.கே. சிவகுமார் அவர்கள் தான் பின்வாங்க போவதில்லை என்று தெரிவித்த நிலையில், இவ்விவகாரத்தில் தற்போதுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எத்தகைய நிலைப்பாட்டை முன்னெடுக்கும் என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாத புதிராகவே பார்க்கப்படுகிறது என்றும், அடுத்ததாக ஏற்கனவே பாஜக தமிழ்நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் வேலைகளை துரிதப்படுத்திய நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் தலைமைக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கக் கூடியவர் கார்த்திக் பா. சிதம்பரம் என்பதும், மிக வலிமையான அரசியல் காய்நகர்தல்களை தைரியமாக மேற்கொள்ளும் ஒப்பற்ற ஆளுமை எங்கள் கார்த்திக் பா. சிதம்பரம் தான் என்று காங்கிரஸ் மேலிடம் பார்க்கப்படுவதாகவும் அதனால் காங்கிரஸ் கமிட்டி தலைவராக முன்மொழியப்பட்டுள்ளார் எங்கள் தலைவர் என்றனர் வெளிப்படையாக.
- செய்தியாளர் ஜே.கெ. லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment