மேலும் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் திருப்புவனம் ஒன்றியம் பாட்டம் கிராமத்தில் புதிய பேருந்து நிழற்கூட கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் திருமதி. ஆ.தமிழரசி ரவிக்குமார் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கிராமப்புறங்களில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் பொருட்டு கழூவன்குளம் கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பேருந்து வழித்தடத்தை துவக்கி வைத்தார்கள். இதில் ஊராட்சி மன்ற தலைவர் குழந்தை பிச்சை உள்ளிட்ட ஒன்றிய பிரதிநிதிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் கழக உடன்பிறப்புகளும் கலந்துகொண்டனர்.
அடுத்ததாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தமிழக அரசின் 2-ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு அர.சக்கரபாணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிரவிக்குமார் அவர்கள் கலந்துகொண்டு விழா சாதனை விளக்க பேருரை ஆற்றினார்.
- செய்தியாளர் ஜேகெ. லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment