மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச இ-சேவை மையத்தினை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் இன்று துவக்கி வைத்தார்கள். நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு சுப. மதியரசன் அவர்களும், ஒன்றிய கழகச் செயலாளர் திரு.வெங்கட்ராமன் அவர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும், கழக முன்னோடிகளும் மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பின்னர் திராவிட பேரியக்கமாம் திமுகவில் மானாமதுரை ஒன்றியம், கல்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி யாஸ்மின் சஞ்சய் அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிரவிக்குமார் முன்னிலையில் தாய் கழகத்தில் இணைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- செய்தியாளர் ஜேகெ. லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment