தீர்த்தவாரி வைகை ஆற்றில் நடைபெற்ற உள்ள நிலையில் கோவில் நடைமுறையில் நடப்பது பின்வருமாறு, அன்புசார்ந்த பக்தகோடி மெய்யன்பர்களுக்கு கேட்டுக்கொள்ளப்படுவது, சிவ நேயச்செல்வர்களே, நமது மானாமதுரை அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத சோமநாத ஸ்வாமி ஆலயத்தில் 2023 ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழாவின் 10ம் நாள் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது, ஆண்டும்தோறும் நடைபெறும் என்றாலும், வைகையில் சித்திரைத் திருவிழாவின் போது தண்ணீர் நன்கு வருவது இதுவே முதல் முறை.
ஆகவே தீர்த்தவாரி வைகை ஆற்றில் நடைபெற உள்ளது, அப்போது அஸ்திர தேவர் ஆற்றில் முழுகுவார். அப்போது நாமும் மூழ்கி எழும் போது, ஒரே சமயத்தில் நாமும், அஸ்திர தேவரும், நீருக்குள்ளே இருப்பதானால் நம் பாவங்களை நீருக்குள்ளேயே போக்குகிறார் அஸ்திர ராஜர், இங்கு அஸ்திர தேவரே சிவபெருமானாக இருக்கிறார், ஆகவே தீர்த்தவாரியில் மூழ்கி தங்கள் பாவங்களைப் போக்குவீர்களாக என்று தெரிவித்தனர். தீர்த்தவாரி நேரம் காலை 10 மணி முதல் 11 மணிக்குள் நடைபெற்றது இனிதே முடிந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment