மானாமதுரை ஒன்றியம், வாகுடி ஊராட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கில் கலைஞரின் 'வரும்முன் காப்போம் திட்டத்தின்' மூலம் மருத்துவ முகாமினை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் துவக்கி வைத்தார். பின்னர் ஏழை எளிய பயனாளிகள் பயன்பெறும் வகையில் மருத்துவப் பெட்டகங்களை வழங்கினார்.


இந்நிகழ்வில் மருத்துவத் துறை அதிகாரிகளும், ஒன்றிய குழு தலைவர் திருமதி. லதா அண்ணாதுரை, அரசு மருத்துவர்களும், செவிலியர்களும், ஊராட்சி மன்ற தலைவர் மாயாண்டி, திமுக கிளைக் செயலாளர்கள் ராஜேந்திரன், வேலுச்சாமி மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
- செய்தியாளர் ஜே.கெ. லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment