சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் JCI KARAIKUDI KINGS மற்றும் பிரபு டெண்டல் காரைக்குடி இணைந்து நடத்திய மாபெரும் இலவச பல் பரிசோதனை முகாம் காரைக்குடி வார்டு 12யில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மண்டல 18யின் தலைவர் N.கார்த்திக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


மேலும் இந்நிகழ்ச்சிக்கு அசோக் ராஜ் முன்னிலை வகித்தார், வார்டு 12யின் கவுன்சிலர் ராதா பாண்டியராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார், காரைக்குடி கிங்ஸ் கிளை உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர், இந்த இலவச பல் பரிசோதனை முகாமில் வார்டு 12யில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
- செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment