சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி ஒன்றாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் திருமதி தேன்மொழி விஜயகுமார் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து தன் சார்பாகவும் தனது வார்டு மக்கள் சார்பாகவும் பொன்னாடை போற்றி மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார்.
சமீபத்தில் தமிழ்நாடு அரசு பல ஐஏஎஸ் அதிகாரிகளை இடம் மாறுதல் செய்தது இதில் திருமதி ஆஷா அவர்கள் கடந்த வாரம் மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார், அவருடைய கணவரும் இடம் மாற்றப்பட்டு சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிகழ்வில் வார்டு மக்கள் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் ஜே.கெ. லிவிங்ஸ்டன்


No comments:
Post a Comment