சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், 2 புதிய பேருந்து வழித்தடங்களை, கொடியசைத்து துவக்கி வைத்தார் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 22 May 2023

சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், 2 புதிய பேருந்து வழித்தடங்களை, கொடியசைத்து துவக்கி வைத்தார் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்.


கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட கரிசல்பட்டி ஊராட்சி மற்றும் சிங்கம்புணரி பேரூராட்சிப் பகுதி ஆகியவைகளில் புதிய பேருந்து வழித்தடங்களை, மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ)திரு.ப.மணிவண்ணன், தலைமையில், கொடியசைத்து துவக்கி வைத்து, தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் , எல்லோருக்கும் எல்லாமும் என்ற அடிப்படையில், பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்பாகவே, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான முதலமைச்சராக திகழ்ந்து வருகிறார்கள்.

 

அந்தவகையில், சிவகங்கை மாவட்டத்தில், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும், மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாகுபாடின்றி கிடைக்கப்பெறச் செய்யும் வகையிலும், குறிப்பாக, அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் பொருட்டு, அனைத்து வளர்ச்சிப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட கரிசல்பட்டி ஊராட்சி என்பது, சுற்றியுள்ள மாவட்டங்களான சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை இணைக்கின்ற பகுதியாக விளங்கி வருகிறது. இப்பகுதிக்கு முன்னதாக, பேருந்து வசதிகள் போதுமானதாக இருந்து வந்தது. தற்போது, இதனை மேம்படுத்திடும் நோக்கில், வழித்தடம் 564-ன் கீழ் காலை 05.30 மணிக்கு புதுக்கோட்டையிலிருந்து திண்டுக்கல் வரையிலான பேருந்தினை, பொன்னமராவதி, கே.புதுப்பட்டி, கரிசல்பட்டி, புழுதிப்பட்டி, நத்தம் ஆகிய வழிகளிலும், மாலை 05.20 மணிக்கு திண்டுக்கல்லிருந்து புதுக்கோட்டை வரையில் மேற்கண்ட ஊர்களின் வழியாகவும் இயக்கிடும் பொருட்டு, இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.


இதேபோன்று, பொதுமக்களின் நீண்டநாள் கோரிகையாகவுள்ள சிங்கம்புணரி – செருதப்பட்டி வழித்தடங்களுக்கென பேருந்தினை துவக்கி வைத்திடும் பொருட்டு, இன்றையதினம் சிங்கம்புணரி பேருந்து நிலையத்தில் மேற்கண்ட வழித்தடங்களுக்கான பேருந்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்தானது பருகப்பட்டி, அணியம்பட்டி, வகுத்தெழுவன்பட்டி வழியாக இயக்கப்படவுள்ளது. 


இதுபோன்று, வணிகர்கள், மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களுக்கு பயனுள்ள வகையில்,  பல்வேறு போக்குவரத்து வழித்தடங்கள் மாவட்டம் முழுவதும் புதிதாக தொடங்கப்பட்டு வருகிறது என,  கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்  தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் சிங்காரவேலு, கோட்ட மேலாளர் தங்கபாண்டி, கிளை மேலாளர் சுரேஷ், மண்டல  வணிக மேலாளர்கள் நாகராஜ், சுப்பு, சிங்கம்புணரி பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, சிங்கம்புணரி வட்டாட்சியர்  சாந்தி, கரிசல்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ஷாஜகான் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad