சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் சாலை கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 1 கோடியே 25 லட்சத்திற்க்கு புதிய மருத்துவமனை கட்டிடத்தை முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் MP தலைமையில், முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான ஆ. தமிழரசிரவிகுமார் அடிக்கல் நாட்டினார்கள்.


இந்நிகழ்ச்சியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி, ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், நகர் தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், காங்கிரஸ் பேரியக்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், அரசு துறை அதிகாரிகள் ஆகியோர் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் ஜே.கெ. லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment