திராவிடப் பேரியக்கத்தின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதி அவர்களின் அமைச்சரவையில் வீற்றிருந்தவருமான தா. கிருட்டிணன் அவர்களின் 20-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கொம்புகரனேந்தல் செல்லும் பகுதியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே.ஆர். பெரியகருப்பன் தலைமையிலும், முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் முன்னிலையிலும் அன்னாரது நினைவிடத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் திரு சேங்கைமாறன், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாகிகளும் இந்நினைவேந்தலில் கலந்துகொண்டனர்.
- செய்தியாளர் ஜே.கெ. லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment