சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவில் உள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் திருக்கோவிலில் ஸ்ரீ சோமநாதர் - ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் திருக்கல்யாணம் நேற்று செவ்வாய்க்கிழமை முடிவடைந்த நிலையில் இன்று புதன்கிழமை காலை சித்திரை திருவிழாவின் ஒரு அங்கமாக ஸ்ரீ சோமநாதர் - ஆனந்தவல்லி அம்மன் தேரோட்டம் மானாமதுரையில் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோவிலை சுற்றி உள்ள தேரோடும் ரத வீதிகளிலும் தேரோட்டம் நடைபெற்றது.
இதில் ஸ்ரீ சோமநாதர் - ஆனந்தவல்லி அம்மன் வீதி உலாவாக பொதுமக்களுக்கு ஆசி வழங்கி அருள் பாலித்தனர். ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியினர் ஆயிரக்கணக்கான பக்தக்கோடி பெருமக்கள் சிறுகோர்கள் முதல் பெரியோர்கள் வரை வடம்பிடித்து தேர் இழுத்து வைபோகத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். தேர் சுற்றும் வீதிகளில் எல்லாம் பொதுமக்கள் வண்ண வண்ண கோலங்கள் இட்டு ஸ்ரீ சோமநாதர் - ஆனந்தவல்லி அம்மனை வரவேற்றன. பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர் மற்றும் மோர் பொதுமக்களாலும் சமூக ஆர்வலர்களாலும் வழங்கப்பட்டது. மேலும் கோவில் நிர்வாகத்தினருக்கும் காவல்துறைக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.
- செய்தியாளர் ஜேகெ. லிவிங்ஸ்டன்

No comments:
Post a Comment