சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவில் உள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் திருக்கோவிலில் ஸ்ரீ சோமநாதர் - ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் திருக்கல்யாணம் இன்று செவ்வாய்க்கிழமை காலை சர்வ அலங்காரங்களுடன் மேளதாளப் பரிவாரங்கள் முழங்க வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தக்கோடி பெருமக்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்டுகளித்தனர்.
ஸ்ரீ சோமநாதர் ஆனந்தவல்லி அம்மன் மக்களுக்கு காட்சிதந்து அருள் பாலித்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் திருக்கல்யாணத்திற்கு நிகராக இங்கு வெகு சிறப்பாக நடைபெற்றது என்று மக்கள் தங்கள் மனமுவந்து கோவில் நிர்வாகத்தை பாராட்டினர்.

மேலும் சுற்றுவட்டார பகுதி மக்கள் அலை கடலாக திரண்டு சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை மேற்கொண்டனர். நாளை ஸ்ரீ சோமநாதர் ஆனந்தவல்லி அம்மன் தேரோட்டத்தில் வீதி உலாவாக வந்து மக்களுக்கு அருள் பாலிக்கும் உள்ளனர்.
- செய்தியாளர் ஜேகெ. லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment