அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்களை இயற்கை விவசாய முறையில், மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், இணைந்து நடத்திய காய்கறி மற்றும் மிளகாய் உழவர் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி கருத்தரங்கு, இன்றையதினம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியப்பகுதியில் சிறப்பாக நடைபெறுகிறது. இப்பயிற்சி கருத்தரங்கில், விவசாயிகள் சாகுபடி செய்யும், உற்பத்திப் பொருட்களை, சந்தைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப ரீதியான கருத்துக்களை, இக்கருத்தரங்கின் வாயிலாக, விஞ்ஞானிகள் தங்களுக்கு எடுத்துரைக்கவுள்ளனர்.
மேலும், வேளாண் பெருங்குடி மக்கள் தங்களை குழுவாக ஒருங்கிணைத்து, அதன்மூலம் உழவர் உற்பத்தி குழுக்களை ஏற்படுத்திடலாம். அதன்படி, சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது, 09 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, நபார்டு வங்கி உதவியுடன் மாவட்டத்தில் 26 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் உற்பத்திப் பொருட்களை மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றி, தாங்களும் தொழில் முனைவோர்களாக உருவெடுக்கும் பொருட்டு, அரசால் தாட்கோ, டாம்கோ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் கடனுதவிகள் வழங்கப்படுகிறது. மேலும், வேளாண் வணிகத்துறையின் சார்பில், 1,000 விவசாயிகள் ஒன்றிணைந்து, ஒரு உழவர் உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கி, அதில், ஒவ்வொரு விவசாயியும் தலா ரூ.1,000முதலீடு செய்தால், அத்தொகையுடன் அக்குழுவிற்கு அரசின் மூலமாகவும் பங்கீட்டுத் தொகையினை வழங்கப்பட்டு, விவசாயிகளின் மதிப்புக்கூட்டுப் பொருட்களை சந்தைப்படுத்தி, அவர்கள் பயன்பெறுவதற்கான நடவடிக்கையும் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், ஆர்வமுள்ள இளைஞர்கள் தொழில் தொடங்கி, ஏற்றுமதி செய்வதற்கு ஏதுவாக, போதுமான இடவசதி தேவைப்படின், பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொடர்பாக, மேலும் விவரங்கள் தேவைப்படின், மேலாளரை தொடர்பு பயன்பெறலாம். புதிய தொழில் முனைவோர்களுக்கென மாவட்ட தொழில் மையத்தின் வாயிலாக, தொழில் தொடங்கிடுவதற்கு ஏதுவாக, கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதனையும் பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம்.
எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியப்பகுதியில் காய்கறி மற்றும் பப்பாளிப் பழங்கள் வெகுவாக விளைகின்றன. அதனை முறையாக தொழில்நுட்ப ரீதியாக சந்தைப்படுத்துவதற்கான முறைகளை அறிந்து கொண்டு, பயன்பெற வேண்டும். விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து, திறன்மிக்க வல்லுநர்களைக் கொண்டு, இக்கருத்தரங்கில் விரிவாக எடுத்துரைக்கப்படவுள்ளது. இதனை, முறையாக பயன்படுத்திக் கொண்டு, மற்ற விவசாயிகளுக்கும், இது குறித்து எடுத்துரைத்து பயன்பெறச் செய்ய வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பல்வேறு வகையான விதைகளை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், டாக்டர்.ஆர்.செந்தில்குமார், டாக்டர்.வி.சங்கர், துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) ப.தமிழ்செல்வி, மேலாளர் பி.போஸ், மண்டல ஒருங்கிணைப்பாளர் (விதைகள்) ஜீவானந்தம், வேளாண்மை அலுவலர்கள் ம.காளிமுத்து, கோ.கனிமொழி மரகதம், கி.புவனேஷ்வரி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment