
இந்த கண்மாய் விளாக்குளம் மற்றும் செய்யாளூர் கிராமத்திற்கு பாத்தியமானது, மேலும் இந்த கண்மாயின் மூலமாகத்தான் சுமார் நூறு ஏக்கருக்கும் மேலாக மற்றும் பத்திற்கும் மேற்பட்ட கிராமத்தினர் விவசாயத்திற்கு பாசன வசதி பெற்று வருகின்றனர். சமீப காலமாக இங்கு பட்டா வழங்கப்பட்டு வருவதாக தெரியவந்தது, மேலும் பட்டா வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் விவசாயத்திற்கு கிடைக்கும் பாசன நீர் கிடைக்காமல் தடை பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் சுற்று வட்டாரப் பகுதி கிராம பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக அரசுசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க மனு கொடுக்க வந்துள்ளோம் என்று கூறியதோடு, இதுபோல் மேலும் தொடர்ந்தால் தங்களின் வாழ்வாதாரமான விவசாயம் பாதிக்கப்பட்டு விடும் என்று அனைத்து கிராம மக்களும் அஞ்சுகின்றனர் என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment