சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவில் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அரிதி பெரும்பான்மையாக 138 தொகுதிகளில் பெற்று வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இதில் நகர் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் நகர் மன்ற உறுப்பினர் கலந்து கொண்டார்கள்.

இது பற்றி சில நிர்வாகிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், இனி இதுபோல் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற இதுவே தொடக்கப் புள்ளி என்றும் பாரதிய ஜனதா கட்சியின் பிரிவினைவாதம் மற்றும் வெறுப்பு பிரச்சாரம் இனி பலிக்காது, இந்திய மக்கள் அனைவரும் உன்னிப்பாக அரசியலை கவனித்து வருகின்றனர் என்று கூறிய நிர்வாகிகள், இத்தேர்தல் மூலமாக மக்கள் ஜனநாயக ரீதியாக செயல்படும் காங்கிரஸ் கட்சியையே விரும்புகின்றனர், தென்னிந்தியாவில் பாஜக காலூன்ற விடாமல் மக்கள் புறக்கணித்து வருகின்றனர் என்று வெளிப்படையாக இத்தேர்தல் உணர்த்துகிறது என்று தெரிவித்தனர்.
- செய்தியாளர் ஜேகெ. லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment