அரசுப்பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்பதை நிரூபிக்கும் வகையில் மற்றுமொரு சாதனை, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி ரயில்வே காலனியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான மாணவி இலக்கியா 10ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்விலில் 493 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவிலான அரசுப் பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அம்மாணவியை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சந்தித்து தனது வாழ்த்துக்களை மாணவி இலக்கியாவிற்கும் அவருடைய பெற்றோருக்கும் தெரிவித்துக் கொண்டார். ஏற்கனவே 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்விலில் மாவட்ட அளவில் முதல் இடம் பெற்ற மாணவி செல்வி. ஜனனி என்பவரும் மானாமதுரையை சேர்ந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மானாமதுரையை சேர்ந்த மாணவிகள் தேர்வுகளில் சாதனை பெற்றுவருவது இவ்வூருக்கும் இம்மக்களுக்கும் பெருமை தேடித் தருவதாக பார்க்கப்படுகிறது என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பெருமிதம் கொள்கின்றனர். இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் துரை. ராஜாமணி அவர்கள் மற்றும் மாணவியின் பெற்றோர்கள் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் ஜே.கெ. லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment