கல்லல் ஊராட்சி, கீழக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவர் தன்னுடைய தந்தை மணிமுத்து பெயரில் இருந்த வீடு மற்றும் இடங்களை பத்திரப்பதிவு அலுவலகத்தில் அவரது பெயருக்கு மாற்றிக் கொண்ட நிலையில் வீட்டு வரி ரசீது வழங்கும்படி கல்லல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இந்நிலையில் வீட்டு வரி ரசீது பெற வேண்டும் என்றால் ரூபாய் 13 ஆயிரம் லஞ்சம் கொடுக்கவேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் நாச்சியப்பன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பாலாஜி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்த நிலையில், அதிகாரிகளின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுக்களை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கொடுப்பதற்காக சென்ற நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் நாச்சியப்பன் தனது கார் ஓட்டுநரான சங்கர் என்பவரிடம் அந்த பணத்தை கொடுக்க சொன்ன நிலையில் ஓட்டுநர் பணத்தை பெறும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்து சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment